பல வகையான மருந்துகளுக்கு சர்வதேச சப்ளையர்களிடமிருந்து ஏலங்களை அழைப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
புற்றுநோய், குறைந்த இரத்த அளவு சிகிச்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்களை கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதன்படி, குறைந்த இரத்த அளவு (hypovolemia) மற்றும் இரத்தத்தில் குறைந்த அல்புமின் அளவைக் குணப்படுத்தப் பயன்படும் ஹியூமன் அல்புமின் சொல்யூஷன் 20%, 50 மில்லி பாட்டில்கள் 340,000 இனை கொள்வனவு செய்ய சர்வதேச போட்டி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன.
இதேவேளை, குறிப்பிட்ட வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் 440 மில்லிகிராம் trastuzumab ஊசியின் 20 மில்லி 18,000 குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டி ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.