உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு நாளை(04) அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக, நாளை வரை தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு மேலதிக நடவடிக்கைகளையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.