follow the truth

follow the truth

April, 4, 2025
HomeTOP223 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளது.

23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியமை மற்றும் பொருட்களில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இன்றி விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடத்திலும் 172 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சுமார் 6.5 மில்லியன் ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டது.

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சந்தைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது காலாவதி திகதி மற்றும் பிற தகவல்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மருந்து கொள்வனவுக்கு சர்வதேச சப்ளையர்களிடமிருந்து ஏலங்களை கோர அமைச்சரவை அனுமதி

பல வகையான மருந்துகளுக்கு சர்வதேச சப்ளையர்களிடமிருந்து ஏலங்களை அழைப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. புற்றுநோய், குறைந்த இரத்த அளவு சிகிச்சை...

வெலிக்கடை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமா? மற்றுமொரு இளைஞன் பலி

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் பதுளை மீகஹகிவுலவைச் சேர்ந்த எம். சத்சர நிமேஷ் என்ற...

எதிர்காலத்தில் மருந்துகளை வழங்கும் செயல்பாட்டில் எந்த அரசியல் செல்வாக்கும் இருக்காது

இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, பற்றாக்குறை அல்லது தாமதங்கள் இல்லாமல்...