ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்(CID) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கையை சமர்ப்பித்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களுள் பிரபல அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்குவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குற்றப் புலனாய்பு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்படி விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
பணத்தைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்துவரப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.