காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 80 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரவு முழுவதும் தொடர்ந்து வரும் நிலையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், காஸா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டு வரும் வைத்தியசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காஸா மீதான இஸ்ரேலின் இதுவரையான தாக்குதல்களில் 50,423 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 114,638 பேர் காயமடைந்ததாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.