இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதனை இந்திய அரசு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக வலைத்தளக் கணக்கில் அந்தப் பயணம் குறித்த குறிப்பைப் பதிவிட்டுள்ளார், மேலும் அவர் பதிவிட்ட குறிப்பு கீழே உள்ளது.
My visit to Sri Lanka will take place from the 4th till the 6th. This visit comes after the successful visit of President Anura Kumara Dissanayake to India. We will review the multifaceted India-Sri Lanka friendship and discuss newer avenues of cooperation. I look forward to the…
— Narendra Modi (@narendramodi) April 3, 2025
“எனது இலங்கை விஜயம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய விஜயத்தின் பின்னர் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்திய-இலங்கை நட்புறவை மீளாய்வு செய்து புதிய ஒத்துழைப்பின் வழிகள் குறித்து கலந்துரையாடவுள்ளோம். அங்கு பல்வேறு சந்திப்புகளை எதிர்பார்க்கிறேன்..”