இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனுராதபுரம் உப பிரிவினரால் சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அனுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர்.
சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.