இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவத் தலைவர்கள் உட்பட நான்கு பேர் மீது இங்கிலாந்து தடைகளை விதித்தது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு அமைச்சர் குழுவை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.