follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP1இஷாரா செவ்வந்தியை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

இஷாரா செவ்வந்தியை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

Published on

கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவருடன் போதைப்பொருள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி, புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து சங்கட்‌டான குற்றவாளியான கணேமுல்ல சஞ்ஜீவ என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவருக்கு பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் உதவி மற்றும் ஆதரவு வழங்கியிருந்தார்.

துப்பாக்கிச்சூடு நடந்த நாள் முதல் இதுவரை அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து துல்லியமான தகவல் இல்லாததால், சந்தேக நபரை கைது செய்வதற்கு துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி இலக்கங்கள்:

பணிப்பாளர், கொழும்பு குற்றப்பிரிவு – 071-8591727
நிலைய பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றப்பிரிவு – 071-8591735

மேலும், தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை விஜயம் குறித்து மோடியின் X பதிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை...

தமிழ், சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்...

இலங்கை பொருட்களுக்கு 44% வரியை விதித்த அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது...