எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“டீசல் விலையை கணிசமான அளவு குறைத்திருந்தால், பேருந்து கட்டணத்தின் பலன் மக்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது பெட்ரோல் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத ஆரம்பத்தில் ஆண்டுக்கு பேருந்து கட்டணம் வரும். எனவே, ஜூலையில், பேருந்து கட்டணம் குறையாமல், கண்டிப்பாக, ஜூலையில், கணிசமான அளவு உயரும்..”