சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதால் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க முடியாது என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசிங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்
“நாங்களும் எரிபொருள் விலையை குறைக்க விரும்புகிறோம், ஆனால் தற்போது அதை செய்ய வழியில்லை, ஏனென்றால் நாங்கள் இன்னும் ஐஎம்எஃப் நிபந்தனைகளுடன் இருக்கிறோம். வருமானம் மற்றும் செலவுகளைப் பார்க்க வேண்டும்.
அரசாங்கத்தின் வருமானத்தை ஒரே நேரத்தில் குறைப்பது கடினம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பக்கம் செல்ல வேண்டும். அதனால்தான் இந்தியப் பிரதமர் இங்கு வரும்போது மின்சார கட்டணத்தையும் குறைக்க வேண்டும். எரிபொருளுடன் சரிசெய்தல் என்பது உங்களுக்குத் தெரியும்..”