பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் பரவலாக மழையுடன் கூடிய கடுமையான மின்னல் அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.