எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் லலித் தர்மசேகர, இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதை விட முறையான ஒழுங்குமுறை மூலம் பொதுமக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என தெரிவித்தார்.