புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகிய இணைந்து சற்றுமுன்னர் அறிவித்தன.
இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் திங்கட்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.