கடந்த 22ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக பொலிஸார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில்;
22/03/2025 அன்று கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் சிலர் அது தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல்கள் சரியானவையல்ல, இதனால் சமூகத்தில் தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பது இலங்கை காவல்துறையின் பொறுப்பாகும்.
இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டமை தொடர்பான தகவலின் அடிப்படையில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த விசாரணையில் இச்செயலை மேற்கொண்ட இளைஞன் குறித்த தகவல்களின் அடிப்படையில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தாண்டி கடும்போக்காளர் எனத் தெரியவந்துள்ளது.
இச்சந்தேக நபரின் செயற்பாடுகள் தொடர்பில் நீண்டகாலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வெளியாகியுள்ள உண்மைகளின்படி, இணையம் பாவனை மற்றும் ஏனைய முறைகளை பாவித்தமையினால் சில மன உந்துதல்களுக்கு உள்ளானவர் என அவதானிக்கப்பட்டுள்ளதால், அந்த மன நிலையை அடிப்படையாக கொண்டு மதவெறியில் ஈடுபட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேகநபரின் கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்கள் மத்தியில் பல்வேறு தேசிய மற்றும் மத விழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ள வேளையில், இவ்வாறான கைது நடவடிக்கையானது நாட்டின் அமைதிக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு, விசாரணைகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலிஸ் ஊடகப் பிரிவு.