follow the truth

follow the truth

April, 1, 2025
HomeTOP1தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது - விஜயதாச ராஜபக்ஷ

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது – விஜயதாச ராஜபக்ஷ

Published on

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, திசைகாட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.

தேசபந்து தென்னகோன் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொள்வது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போது பிரச்சினை என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதி தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தது.

அந்த நியமனத்தை மேற்கொள்ளும்போது அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டதாக சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் மூலம் அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அல்ல. நீதிமன்ற உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு அமுலில் இருக்கும் அதே வேளையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கையழுத்திட்டு தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரேரணை சமர்ப்பித்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், அத்தகைய பிரேரணையை அப்போது பதவியில் இருந்த பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

அதன்படி, உயர் நீதிமன்றத்தால் அவர் பொலிஸ்மா அதிபர் இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது அரசியலமைப்புச் சட்டத்தின், 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க சிரேஸ்ட அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு முற்றிலும் முரணானது.

அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும், மேலும் அந்தக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இருக்க வேண்டும்.

எனவே உயர் நீதிமன்றம் அவர் பொலிஸ் மா அதிபர் இல்லை என்று இடைக்கால தடை விதித்துள்ளது.

மறுபுறம், பொலிஸ்மா அதிபரை பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, இது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை, குறிப்பாக சபாநாயகரால், கணிசமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும்.

ஏனென்றால் அவர்கள் செய்யப் போவது எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாத ஒரு செயலாகும்….” 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது”

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதால் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க முடியாது என விஞ்ஞான மற்றும்...

பலத்த மின்னல் மற்றும் கனமழைக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு

பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா...

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

இன்று முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை...