2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் (01) முதல் தொடங்கும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வினாத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட வினாத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக சுமார் 16,000 ஆசிரியர்கள் இணைவார்கள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.