காஸா பகுதியில் புதிய போர் நிறுத்த பிரேரணைக்கு ஹமாஸ் அமைப்புகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா பகுதிக்கு வெளியே உள்ள ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரான கலீல் அல்-ஹயாம், எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் அனுப்பிய போர்நிறுத்த முன்மொழிவுக்கு தனது அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் திட்டம் இஸ்ரேலியப் பிரதமரால் பெறப்பட்டதாகவும், அமெரிக்காவுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு எதிர்த் திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த மட்டுப்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் ரமழானின் கடைசி நாளில் தொடங்கப்படலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.