ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரியும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மிப்லாள் மௌலவி வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை முன்னாள உறுப்பினர் முஸம்மில் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எக்ஸ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
“இன்று பிற்பகல் 3 மணிக்கு திட்டமிடப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்த மிஃப்லால் மௌலவி இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக CCD க்கு அழைக்கப்பட்டு அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது – பெரும்பாலும் தேடுதலுக்காக.
போராட்டக்காரர்கள் ஏன் மிரட்டப்படுகிறார்கள் என்பது கேள்வி? “ என அவர் தெரிவித்துள்ளார்.