மியன்மாரை தாக்கியுள்ள நிலநடுக்கம் காரணமாக இதுவரை 704பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
படுகாயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1600க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மியன்மாரின் 2ஆவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் மியன்மார் மற்றும் பேங்காக்கில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் பேங்காக்கில் ஒரு உயரமான கட்டிடம் இடிந்து விழும் காணொளியையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.