அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான கே. எல். எம். அப்துல் காதர், ஏ. நவிநாத், டி.பி.கே.பி. குணசேகர மற்றும் டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகியவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (24) இரவு பொலிஸ் போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 02 சார்ஜன்ட்கள் மற்றும் 02 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.