இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டிற்கு செல்ல சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற 3 ஊழல் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை கைது செய்யப்பட்டார்.