follow the truth

follow the truth

March, 31, 2025
HomeTOP2"சுப நேரத்துக்கு நாட்டை அநுரவுக்கு கொடுத்த மக்கள் இப்போது வாழப் பழகிக் கொள்ளுங்கள்.."

“சுப நேரத்துக்கு நாட்டை அநுரவுக்கு கொடுத்த மக்கள் இப்போது வாழப் பழகிக் கொள்ளுங்கள்..”

Published on

சுப நேரத்துக்கு நாட்டை அநுரவிடம் கொடுத்து விட்டு தற்போது வாழ்வதற்கு நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி பொருட்களின் விலைகள் அதிகரித்து, கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுக்கடங்கா அழுத்தங்களால் நாட்டு மக்கள் அசௌகரியத்தில் வாழ்கின்றனர். சிலர் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு வேளையும், ஒரு வேளையும் சாப்பிடும் மக்களும் காணப்படுகின்றனர். இந்த அரசாங்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (26) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

“.. தேங்காய் குறித்தும், ​அரிசி குறித்தும் பேசும்போது, ​​அரசாங்கம் புலம்பிக்கொண்டிருக்கிறது. குரங்கள் மீதும், நாய்கள் மீதும் பழி சுமத்தி விட்டு தமது பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது. அதிகாரம் கிடைத்தும் என்ன செய்வது என்பது குறித்து தடமாறி வருகின்றனர்.

அரிசி விலையை 300 ரூபா ஆக அதிகரித்த அரசி விலை சூத்திரம் ஏதே தெரியாது? இதற்கு ஒரே காரணம் இந்த அரசால் நாட்டை ஆள முடியாது என்பதாகும். மக்களுக்கு உகந்த உன்னத சேவையை இவர்களால் வழங்க முடியாது. இவர்களால் பேசுமளவுக்கு நடைமுறையில் ஆளும் திறன் இல்லை..”

தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுக்க முயன்றவர்களும் இன்று மௌனம் காக்கின்றனர்.

பாதுகாப்பு தொடர்பில் விரிவுரைகளை வழங்குவதற்கு அழைத்த பிரதியமைச்சர் கூட இன்று மௌனம் காத்து வருகிறார். நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு சிக்கலில் காணப்படுகின்றது. நீதிமன்றத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 3 மாதங்களில் மட்டும் 22 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. கொள்ளையர்கள், கொலைகாரர்கள் மற்றும் ஊழல்வாதிகள் சமூகத்தையே சீரழித்து வருகின்றனர்.

பொலிஸ்மா அதிபர் தானாகவே ஆஜராகும் வரையில் அவரை கண்டுபிடிக்க முடியாத இந்த அரசாங்கத்திற்கு, நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வரும் வரையிலும் எதுவும் தெரியாத நிலையிலயே நாட்டின் தேசிய பாதுகாப்பு காணப்படுகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு உண்மையிலயே ஆபத்தில் உள்ளது. இவ்வாறு ஒரு நாடாக எம்மால் முன்னோக்கி பயணிக்க முடியாது..” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய காசா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காஸா பகுதியில் புதிய போர் நிறுத்த பிரேரணைக்கு ஹமாஸ் அமைப்புகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா...

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையாம் – அநுர அரசு திட்டவட்டம்

அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாக தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல என் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு...

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கும் இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும்...