நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜீவன் தொண்டமான் மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்து கூறியதாவது;
“நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனுக்களை சமர்ப்பித்தது. மஸ்கெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை அறிந்த சில குழுக்கள் இது குறித்து மகிழ்ச்சியடைகின்றன.”
“ஆனால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்வோம். பின்னர் மகிழ்ச்சியாக இருந்தவர்களின் மகிழ்ச்சியும் முடிவுக்கு வரும். இந்த உள்ளூராட்சி தேர்தலில் எங்கள் சக்தியை முழுமையாகக் காட்ட நடவடிக்கை எடுப்போம்.”