follow the truth

follow the truth

March, 31, 2025
HomeTOP1ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

Published on

பத்து அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேற்று நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று (26) நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் துருவ் ஜோரேல் அதிகபட்சமாக 33 ஓட்டங்களை சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் வைபவ், ஹர்ஷித் ரானா, மோயின் அலி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 152 எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக், மோயின் அலி களமிறங்கினர். மோயின் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கெப்டன் ரஹானே 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, அங்க்ரிஷ் ரகுவஞ்சியுடன் ஜோடி சேர்ந்த டிகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் கொல்கத்தா 17.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய குவிண்டன் டிகாக் 61 பந்துகளில் 97 ஓட்டங்களுடன் 17 பந்துகளில் 22 ஓட்டங்களை விளாசிய அங்க்ரிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த வெற்றி மூலம் தரவரிசையில் கொல்கத்தா 6வது இடத்தில் உள்ளது. தோல்வி மூலம் தரவரிசையில் ராஜஸ்தான் 10வது இடத்தில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...