follow the truth

follow the truth

March, 30, 2025
HomeTOP22026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி

Published on

எதிர்வரும் 2026ம ஆண்டு 23-வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தெரிவு செய்யப்படும்.

இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன.

இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா – பிரேசில் அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா அணி ஆட்ட நேர முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியில் ஜூலியன் அல்வராஸ், என்சொ பெர்னான்டஸ், மாக் ஆலிஸ்டர் , சிமோன் ஆகியோர் கோல் அடித்தனர், பிரேசில் அணியில் மேத்ஸ் கோல் அடித்தார்.

இந்த வெற்றியால் அர்ஜென்டினா அணி 2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வெப்பமன வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேற்கு...

2025 ஆண்டின் முதலாவது அரிய சூரிய கிரகணம் இன்று

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு...

சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தோனி

ஐ.பி.எல் தொடரின் 8-வது தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல்...