கொழும்பின் கொம்பனி தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய குற்ற விசாரணை பணியகத்தில் சரணடைந்துள்ளனர்.
தற்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு விடுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக யோஷித ராஜபக்ஷ நேற்று (25) கொம்பனி தெரு பொலிஸாரிடம் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
இந்த மோதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டதுடன், சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி மோதலில் தாக்கப்பட்டார்.
இதில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.