கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தைக் கலைத்தல் தொடர்பாக இதற்கு முன்னரான அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்து, சாத்தியவளத்துடன் கூடிய வியாபாரத் திட்டத்தின் அடிப்படையில் குறித்த கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1949 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபன சட்டத்தை இரத்துச் செய்து, குறித்த நிறுவனத்தைக் கலைப்பதற்கு 2024.09.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, சந்தைப் போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் மக்களுக்குத் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை நியாயமான விலையில் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சந்தை நடவடிக்கைகளில் அரச பணிப்பொறுப்புக்களை மேற்கொள்வதற்காக கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் முக்கிய பல பணிகளை மேற்கொள்வதற்கு இயலுமை உண்டு.
அதனால், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தைக் கலைத்தல் தொடர்பாக இதற்கு முன்னரான அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்து, சாத்தியவளத்துடன் கூடிய வியாபாரத் திட்டத்தின் அடிப்படையில் குறித்த கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.