உலகளவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு (டிசம்பர் 24,25, 26) ஆகிய மூன்று நாட்களில் சுமார் 5,900 விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக ‘ஃப்ளைட் அவேர்’ என்கிற விமானம் தொடர்பான விவரங்களைப் வெளியிடும் வலைதளத்தின் தரவுகள் கூறுகின்றன.
இதனால் சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிக அளவில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. திங்கட்கிழமையும் இது போல விமானங்கள் இரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுக்க கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபு பரவி வருவதால் விமான சேவையை நடத்த போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை என விமான சேவை நிறுவனங்கள் கூறுகின்றன.