இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அஹமதாபாத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி 244 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.