எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறி வகைகளை பயிரிடுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பயிர் செய்கை தொடர்பான உடனடி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.