அரசாங்க, அரச சார்பு மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு உட்பட்ட 22,450 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான 36 பில்லியன் ரூபா சேமநல நிதியை செலுத்தத் தவறிவிட்டதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமநல நிதியாக செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தத் தவறிய இந்த நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் திணைக்களத்தின் புதிய ஆணையர் நாயகத்தின் பதவியேற்பு நிகழ்வின்போது ஊடகவியராளர்கள் மத்தியில் நேற்று (24) உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
பாதுகாக்கப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் தனது தொழில்வாய்ப்புக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் ஊழியர் சேமலாப நிதி பங்களிப்புகளை செலுத்தும் பொறுப்பு முதலாளிக்கு உண்டு.
தவறு செய்யும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து விரைவில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படும். இந்த முயற்சியின் மூலம், தொழில் திணைக்களத்தின் முழு செயற்பாடுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.