பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கும், தனியார் பஸ் சங்க உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீட்டுகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சினால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனைக்கு அமைவாகவே பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகள் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது..
எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 முதல் 25 ரூபா வரையில் திருத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.