உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (24) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்து, நாட்டில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மானியங்களை செயல்படுத்துவது மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து சுகாதார அமைச்சருடன் சிறப்பு கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
நாட்டின் சுகாதாரத் துறையில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான மானியங்களை செயல்படுத்துவது மற்றும் இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதே உலக நிதியக் குழுவின் நாட்டிற்கான பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலகளாவிய நிதிக் குழுவின் நாட்டிற்கான விஜயத்தின் பிற நோக்கங்களில், சுகாதார தகவல் மற்றும் தர மேம்பாட்டுத் திட்டம் (HIQI திட்டம்) குறித்து ஆராய் வதும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து முக்கிய தொழில்நுட்ப பங்காளிகள் மற்றும் நன்கொடையாளர்களைச் சந்திப்பதும் அந்த நோக்கத்தில் அடங்கும் என்று தூதுக்குழு சுகாதார அமைச்சரிடம் தெரிவித்தது.
காசநோய் மற்றும் எச்ஐவி மானியங்களுக்கான ஏழாவது மானிய சுழற்சியை (GC7) செயல்படுத்துதல், சுகாதார தகவல் மற்றும் தர மேம்பாடு (HIQI) திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துதல் மற்றும் COVID-19 feedback பொறிமுறை குறித்தும் உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இலங்கையுடனான நீண்டகால உறவுக்காகவும், எச்.ஐ.வி/எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை அதன் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஆதரிப்பதற்கும், இலங்கையின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த நிதி வழங்குவதற்கும் உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது நன்றியைத் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய நிதியம் அளித்து வரும் ஆதரவைப் பாராட்டுவதாகவும், இந்த ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும் என்று நம்புவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் வளங்களை ஈர்த்தல், நிர்வகித்தல் மற்றும் விநியோகித்தல் என்ற நோக்கத்துடன் 2002 இல் நிறுவப்பட்ட உலகளாவிய நிதியம், இந்த மூன்று நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நிதி ஆதாரங்களை வழங்குகிறது மற்றும் நாடுகளில் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு தங்களுடைய அதரவை வழங்குகின்றது.