இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது மற்றும் மக்களுக்குத் தரமான பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் நேற்று (24) கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் பிராந்திய அலுவலக மேலாளர்கள் (RM), செயற்பாட்டு மேலாளர்கள் (OM), அனைத்து டிப்போ பொறியியலாளர்கள் (DE), கணக்காளர்கள், பிரதிப் பொது முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பிராந்திய மற்றும் டிப்போ மட்டத்தில் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன மற்றும் பிரதிப் பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்துகொண்டனர்.