தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 வேட்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.