அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
தீர்மானத்தின் நகலை குமாராவின் குடும்பத்தினருக்கு வழங்கவும், இரங்கல் தெரிவிக்கவும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மேல்சபை செனட்டர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பும் என்று செனட் தலைவர் சாதிக் சஞ்சரானி அறிவித்தார்.