நாடு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
“மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது தொடர்பாக ஒரு விசேட திட்டத்தை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இலங்கை முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல் உள்ளது. ஆனால் அது தேசிய பாதுகாப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எங்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அதில் குறிப்பாகச் செயல்பட்டு வருகிறது.”