இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று (24) இடம்பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயண்டஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணி சார்பாக நிக்கலஸ் பூரான் 75 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஸ் 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பாக அசுதோஸ் சர்மா ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.