டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
அது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்றுள்ளது.
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவுடன் இரட்டையர் போட்டியிலும் பங்கேற்று அங்கும் சாம்பியன்ஷிப்பை வென்றார்.
இந்தப் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பல நாடாளுமன்றத் தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.