எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி கனடாவின் பொதுத்தேர்தல் நடைபெறுமென பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது விதித்துள்ள வரிகளை எதிர்க்கொள்வதற்கான அதிகாரத்தை கோரி பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தேர்தலை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சி ஆகியன இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளன.