அடுத்த வருடம் உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய விவசாய துறைசார் நிபுணர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில், அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தவிடயம் தொடர்பில் கண்டியில் நேற்று(25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன, உரத்தட்டுபாடு காரணமாக பெரும்போக விளைச்சல் உரிய முறையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.