follow the truth

follow the truth

March, 26, 2025
Homeஉலகம்இங்கிலாந்து கடற்கரையில் இருந்த மர்ம உயிரினம் எதுவாக இருக்கும்?

இங்கிலாந்து கடற்கரையில் இருந்த மர்ம உயிரினம் எதுவாக இருக்கும்?

Published on

இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

“இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் விசித்திரமான விஷயம்,” என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடற்பகுதிகளில் விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்தார். இது சமூக ஊடகங்களில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கருங்கடலில் தாக்குதல்களை நிறுத்த ரஷ்யா – உக்ரைன் இணக்கம்

ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளன. வெள்ளை மாளிகை...

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம்...

சீனாவுடன் வர்த்தகத்திற்கு தயாராகும் இந்தியா

டிரம்பின் வரி அச்சுறுத்தலையடுத்து, சீனாவுடனான வர்த்தகத்திற்கு தீவிரமாக இந்தியா தயாராகி வருகிறது. எல்லை பிரச்சினை தற்போது பெரியதாக இல்லாத...