போலி அட்டோனி பத்திரம் தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்று 21 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோர் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.