தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.