சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதீகொடன் பெல்லானவத்த பகுதியில் விருந்தகம் ஒன்றில் சட்ட விரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தி முகநூல் களியாட்டம் நடைபெறுவதாக பொலிசாருக்கு நேற்று முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் போது பொலிசார் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு 76 பேரைக் கைது செய்துள்ளனர்.
களியாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பாவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, மற்றும் சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களுடன் 3 பெண் சந்தேக நபர்களும், 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன் இதில் கலந்து கொண்டிருந்த மேலும் 12 யுவதிகளையும், 47 இளைஞர்களையும் பொலிசார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்ட, கொழும்பை அண்டிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.