follow the truth

follow the truth

March, 24, 2025
HomeTOP1வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் நிலைமை

வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் நிலைமை

Published on

உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையினால் வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் – இலங்கை வணிக சம்மேளனத்தில் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களின் பின்னர் வாகன சந்தையை திறப்பது தொடர்பில் குழுவொன்றை அமைத்து ஆராயப்பட்டது.

அந்த குழுவில் பதிவு செய்த திகதி என்பதற்கு மாறாக உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வாகனம் உற்பத்திசெய்த நிறுவனத்துக்கே இந்த வாகனம் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது என்பதை உரிய வகையில் கண்டறிய முடியாது.

எனவே, வாகனம் உருவாக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு வீதியோட்டத்துக்கு தயார்ப்படுத்தப்பட்ட தினத்தையே அதன் உற்பத்தி திகதியாகக் கொள்ளவேண்டும்.

இந்த சிக்கல் காரணமாகவே பல வாகனங்கள் துறைமுகத்தில் தேங்கியிருக்க வேண்டும் நிலை ஏற்பட்டதாகவும், குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்து முன்னதாக பின்பற்றப்பட முறைமைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என ஜப்பான் – இலங்கை வணிக சம்மேளனத்தில் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியர் துஷ்பிரயோக வழக்கு – சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான சந்தேக நபரை மீண்டும்...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக...

இலங்கை – அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்

இலங்கை - அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை(25) ஆரம்பமாகவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை அவுஸ்திரேலியாவின் கென்பரா (Canberra) நகரில்...