follow the truth

follow the truth

March, 24, 2025
HomeTOP2IPL தொடரின் முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெற்றி

IPL தொடரின் முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெற்றி

Published on

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் அஜின்கியா ரஹானே 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில்175 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியர் துஷ்பிரயோக வழக்கு – சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான சந்தேக நபரை மீண்டும்...

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மூன்று நாள் வேலைத்திட்டம்

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்....

இரத்துச் செய்யப்பட்ட இராஜதந்திர வாகன இலக்கங்களில் வேறு வாகனங்களைப் பதிவு செய்தமையால் 122 மில்லியன் ரூபா நஷ்டம்

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296...