தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உதவித்தொகை, விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் வெட்டுக்களுக்கு எதிராக கடுமையான தொழில்துறை நடவடிக்கையில் இறங்க உள்ளது.
தொழிற்சங்க தலைவர்களுக்கும் அந்த துறைகள் தொடர்பான பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக சில சம்பள அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், மாதாந்த சம்பள அதிகரிப்பு குறைக்கப்படும் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படாததால், எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையான தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியபடி சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்காக, சம்பளங்கள் வெட்டப்படுகின்றன. இதன்படி, தபால், ரயில்வே, சுகாதாரம் என பல துறைகளில் குறிப்பிட்ட பகுதியை தனியார் மயமாக்குவதே சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி நோக்கம் என தொழிற்சங்கங்கள் சார்பில் பேசிய சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.