எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பிலான அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹம்பிலியாவ, மாரஸ்சன பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் மாத்தறை பிரதேசத்தின் கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபுகம வடக்கு பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அன்றைய தினம் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்லை, மல்பொக்க வீதி உள்ளிட்ட வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைத்து விசாரணையின் போது பேருவளை உள்ளுராட்சி சபையே திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் எனவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.